பங்குச்சந்தை: புதிய உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை குறியீடுகள்!!
இன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை குறியீடுகள் புதிய உச்சத்தை அடைந்துள்ளன. வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் 81,000 புள்ளிகளைத் தாண்டியது. இதேபோல் என்எஸ்இ குறியீட்டு எண் நிஃப்டி 24,800 புள்ளிகளை கடந்தது.
ஐடி, எண்ணெய், எரிவாயு மற்றும் எஃப்எம்சிஜி நிறுவனப் பங்குகள் ஏற்றத்தில் இருந்ததால் இரு குறியீடுகளும் லாபத்தில் முடிவடைந்தன. பிஎஸ்இ சென்செக்ஸ் சென்செக்ஸ் 626.91 புள்ளிகள் அல்லது 0.78 சதவீதம் உயர்ந்து 81,343.46 புள்ளிகளில் நிறைவடைந்தது. பங்குச்சந்தை வரலாற்றில் சென்செக்ஸ் குறியீடு 81,000 என்ற மைல்கல்லை தொடுவது இதுவே முதல்முறை. மேலும் என்எஸ்இ நிஃப்டி சாதனை அளவில் முடிந்தது. இது 187.85 புள்ளிகள் அல்லது 0.76 சதவீதம் உயர்ந்து வரலாற்றில் முதல்முறையாக 24,800.85 ஆக உயர்ந்தது.
ஐடி துறை பங்குகளில், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை குறிப்பிடத்தக்க ஏற்றத்துடன் முடிவடைந்தன. குறியீட்டில் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள் வாங்கும் வேகமும் சந்தை லாபத்திற்கு பங்களித்தது.