பங்குச்சந்தை: லாபத்தில் முடிந்தது பங்குச்சந்தை.. அதானி குழும பங்குகள் அபாரம்..!
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (புதன்கிழமை) ஏற்றத்துடன் முடிவடைந்தன. குறிப்பாக அதானி பங்குகள் இன்று சிறப்பாக செயல்பட்டன. அதானி குழும நிறுவனங்கள் மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளை அடுத்தும் அதானி குழுமத்தின் பங்குகள் லாபம் ஈட்டியது. அதானி பவர் மற்றும் அதானி டோட்டல் கேஸ் பங்குகள் தலா 20 சதவீதம் அதிகரித்தது. அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 10 சதவீதம் வரை அதிகரித்தது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் காலையில் 80,121.47 புள்ளிகளில் ஏற்றத்துடன் துவங்கி சிறிது நேரத்தில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. இறுதியாக 230 புள்ளிகள் அதிகரித்து 80,234.06 இல் நிலைபெற்றது. மறுபுறம், நிஃப்டி 80 புள்ளிகள் உயர்ந்து 24,274.90 ஆக முடிந்தது. உலக சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் விலை 72.33 டாலராக வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 84.44ஐ எட்டியது.
லாபத்தில் முடிந்த பங்குகள்: அதானி போர்ட்ஸ், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுசுகி
நஷ்டத்தில் முடிந்த பங்குகள்: ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, இண்டஸ் இண்ட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டைட்டன்