இந்திய பங்குச் சந்தைகள் இன்று பெரும் ஏற்றம் கண்டன. அமெரிக்க பெடரல் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் சர்வதேச சந்தைகளில் நேர்மறைகள் ஆகியவற்றால் குறியீடுகள் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டன. சென்செக்ஸ் முதன்முறையாக 84 ஆயிரத்தை எட்டியது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1,359 புள்ளிகள் உயர்ந்து 84,544 புள்ளிகளாக இருந்தது. நிஃப்டி 375 புள்ளிகள் அதிகரித்து 25,790-ல் நிலைத்தது.
பிஎஸ்இ சென்செக்ஸ்
அதிக லாபம் ஈட்டியவர்கள்:
மஹிந்திரா & மஹிந்திரா (5.57%), ஐசிஐசிஐ வங்கி (3.77%), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (3.66%), எல்&டி (3.07%), பார்தி ஏர்டெல் (2.84%).
அதிகம் நஷ்டமடைந்தவர்கள்:
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (-1.07%), இண்டஸ் இண்ட் வங்கி (-0.33%), டிசிஎஸ் (-0.27%), பஜாஜ் ஃபைனான்ஸ் (-0.07%).