பிரபல தொழிலதிபரான அனில் அம்பானி 5 ஆண்டுகள் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி விதித்துள்ளது.
நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அனில் அம்பானிக்கு இந்த தடையை செபி விதித்துள்ளது.
அனில் அம்பானிக்கு சொந்தமான 24 நிறுவனங்களுக்கும் தடை விதித்த செபி, அவருக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ளது. அத்துடன் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் பத்திர சந்தையில் இருந்து ஆறு மாதங்களுக்கு தடை மற்றும் ரூ.6 லட்சம் அபராதம் விதித்துள்ளது.