ஒரே வாரத்தில் ரூ.2.89 லட்சம் கோடி மதிப்பு உயர்வு
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த வாரம் மட்டும் டாப் 9 நிறுவனங்களின் பங்கு விலை ரூ.2.89 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஏர்டெல், எஸ்பிஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி ஆகியவை அடங்கும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.1.52 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.