இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் மற்றொரு புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ரூ.10க்கு சமமான விலையில் 98 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.999 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஒரு நாளைக்கு 100 SMSகள் மற்றும் வரம்பற்ற அழைப்புகளைப் பெறலாம். இது வரம்பற்ற 5G இணைய அணுகல் சேவையையும் இலவசமாக வழங்குகிறது. ஜியோ டிவி, ஜியோ கிளவுட், ஜியோ சினிமா போன்ற இலவச சந்தாக்களையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.
ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா (வி) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவையும் ஜூலை மாதத்தில் தங்கள் கட்டண விகிதங்களை கணிசமாக உயர்த்தியது. இந்த தனியார் தொலைத்தொடர்பு
நிறுவனங்கள் 5 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தியது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் பிரிவுகளில் கட்டணங்களை உயர்த்தியதால், பல வாடிக்கையாளர்கள் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறியுள்ளனர்.
இதனால் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து ஒரு சரியான நடவடிக்கையாக ஜியோ இந்த மலிவு விலை ரூ.999 ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. மறுபுறம், ஏர்டெல் பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. கூடுதல் டேட்டா திட்டங்களின் செல்லுபடியை அதிகரிக்கும் பல கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது.