2024ல் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதம் – உலக வங்கி கணிப்பு

 

இந்தியாவின் வளர்ச்சி விகித மதிப்பீட்டை உலக வங்கி திருத்தியது. உலக வங்கி 2024 இல் 6.3 சதவீத வளர்ச்சியைக் கணித்திருந்தது, அது இப்போது 7.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சேவைகள் மற்றும் தொழில் துறைகளில் செயல்பாடுகள் வலுவான வேகத்தில் உள்ளதால் பொருளாதார வளர்ச்சி 1.2 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை இருக்கும் என்று கூறியுள்ளது.

நிதிப்பற்றாக்குறை படிப்படியாக குறைந்து, அரசின் கடன் குறையும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்த வளர்ச்சி விகிதம் மத்திய அரசின் பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதற்கிடையில், தெற்காசியா சிறந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்யும். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் முன்னேற்றம் தான். அடுத்த 2 ஆண்டுகளில் உலகின் மிக வேகமாக வளரும் பிராந்தியமாக தெற்காசியா இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளைப் பொறுத்த வரையில், வங்கதேசத்தின் வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாகவும், பாகிஸ்தானின் வளர்ச்சி விகிதம் 2.3 சதவீதமாகவும், இலங்கையின் வளர்ச்சி விகிதம் 2024-25ல் 2.5 சதவீதமாகவும் இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

 
 
 
Exit mobile version