Advertisement
தமிழ்நாடுவணிகம்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.48 அதிகரிப்பு

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.48 அதிகரித்து ரூ.1,903 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதேபோல், எல்பிஜி சிலிண்டரின் விலையையும் எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. இந்த விலை சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.48 அதிகரித்து ரூ.1,903 ஆக உள்ளது.

கடந்த மாதம் ரூ.38 அதிகரித்த நிலையில், இந்த மாதமும் விலை அதிகரித்துள்ளது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை எந்த மாற்றமின்றி ரூ.818.50 ஆக நீடிக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!