Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு
சென்னையில் இன்று (11-11-2024) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது.
கடந்த மாதம் தொடர் ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை இம்மாதம் சற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதன்படி சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.55 குறைந்து ரூ.7,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைந்து இருக்கும் நிலையில் வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1 குறைந்து ரூ.102-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,02,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.