தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.1,320 குறைவு..!
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் இறுதி வரை தொடர் ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை தங்கம் விலை அதிகரித்து வந்தது. அன்று ஒரு கிராம் ரூ.7,455க்கும், ஒரு பவுன் ரூ.59,640க்கும் விற்பனையானது. இது எப்போதும் இல்லாத உயர்வாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600 ஆகவும், கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.102-க்கு விற்பனை செய்யப்படுகிறது.