
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது.
கடந்த 10 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 13ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.960 அதிகரித்தது. நேற்று சென்னையில் தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.56,000க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.56,480 ஆகவும், கிராம் ஒன்றுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.7,060 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் அதிரடியாக அதிகரித்து வருகின்றன. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3 அதிகரித்து ரூ.101 ஆக விற்பனை செய்யப்படுகிறது.