பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதால், சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைந்து விற்பனையாகிறது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மீதான சுங்க வரி 6% மற்றும் பிளாட்டினம் நகைகள் மீதான சுங்க வரி 6.4% ஆக குறைக்கப்பட்டது. இதையடுத்து, வரி குறைப்பின் முதல் நாளே தங்கம் விலை ரூ.2 ஆயிரத்து 80 குறைந்தது.
இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. இதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ.480 குறைந்து ரூ.51 ஆயிரத்து 440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.60 குறைந்து ரூ.6,430க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.89 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.