சென்னையில் தங்கம் விலை இன்று (செப்டம்பர் 16) சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 530 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து 78 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோவுக்கு 700 ரூபாய் அதிகரித்து 78 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
