தங்கம் விலை இன்று ரூ.520 குறைவு!

 

சென்னையில் இன்று (ஏப்ரல் 15) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர் ஏற்றம் கண்டு வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 320 ரூபாய்க்கும், கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 790 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

 

அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து 89 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து 89 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 
 
Exit mobile version