தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1120 அதிகரிப்பு..!

 

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1120 அதிகரித்துள்ளது.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்த நிலையில், இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது சாமானியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.1,120 அதிகரித்து ரூ.51,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ரூ.6,390-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.80.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 
 
Exit mobile version