54 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..!

 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 10) சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,640ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் முதலே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாகவே 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்டுள்ளது. இதன்படி இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,705-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு இன்றைய தினம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,640ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 3,700 ரூபாய் உயர்ந்துள்ளது.

 
 
Exit mobile version