எண்ணெய் நிறுவனங்கள் வணிக ரீதியான 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளன. அந்த வகையில் இன்று ஜூலை 1, 2024 திங்கட்கிழமை எல்பிஜி சிலிண்டர்களின் விலையை சுமார் ரூ.30 குறைத்துள்ளன.
எண்ணெய் நிறுவனங்களின் விலை திருத்தத்திற்குப் பிறகு, 19 கிலோ வணிக எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ஜூலை 1 திங்கள்கிழமை முதல் ரூ.30 குறைந்துள்ளது. இப்போது வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை நாட்டின் தலைநகர் டெல்லியில் ரூ.1646 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1756 ஆகவும், மும்பையில் ரூ.1598 ஆகவும், சென்னையில் ரூ.1809.50 ஆகவும் உள்ளது.
அதேசமயம் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இது கடைசியாக மார்ச் 9, 2024 அன்று மாற்றப்பட்டது மற்றும் கட்டணம் ரூ.100 குறைக்கப்பட்டது. இப்போது வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.803 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.829 ஆகவும், மும்பையில் ரூ.802.50 ஆகவும், சென்னையில் ரூ.818.50 ஆகவும் உள்ளது.