ஈரான் – இஸ்ரேல் இடையே மோதல்: கச்சா எண்ணெய் விலை உயர்வு..!

 

சமீபத்தில் ஈரான், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்ததால் தற்போது மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதன் எதிரொலியாக, இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90.57 டாலராக உயர்ந்தது, இது முந்தைய நாளின் விலையில் இருந்து 0.52 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

பெரும்பாலான நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கின்றன. அதிகரித்து வரும் எண்ணெய் விலை ஆசிய-பசிபிக் பொருளாதாரங்களுக்கு கணிசமான அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்தியா தனது தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்வதால், தற்போதைய நிலை பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு சவாலாக மாறியுள்ளது.

 
 
Exit mobile version