முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவின் தலைவர் மணிஷ் திவாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணீஷ் திவாரி வெளியேறியதற்கு பதிலளித்த அமேசான் செய்தித் தொடர்பாளர்.. ‘அமேசான் இந்தியாவின் கன்ட்ரி மேனேஜராக பணிபுரியும் மணீஷ் திவாரி, நிறுவனத்திற்கு வெளியே வாய்ப்புகளை நோக்கி நகர முடிவு செய்துள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாக Amazon.in ஐ இந்திய மக்களுக்கு விருப்பமான சந்தையாக மாற்றுவதில் அவரது தலைமை முக்கியப் பங்காற்றியுள்ளது’ என்றார்.
இதனிடையே, அதிகாரப் பரிமாற்றத்திற்காக அவர் அக்டோபர் வரை அமேசானில் தொடர்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.