தமிழ்நாடு

அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் பேருந்து சேவைகள் – இன்று முதல் இயக்கம்!!

தமிழகத்தில் ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஒரு வார முழு ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களிலும், 50% இருக்கை வசதிகளுடன் பேருந்து சேவைகள் இன்று (ஜூலை 5) முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா 2 ஆம் அலை காரணமாக கடந்த 2 மாதங்களாக நீட்டிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு உத்தரவானது தற்போது ஜூலை 12 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கடந்த 4 வாரங்களாக தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி முதல் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் 50% இருக்கை வசதிகளுடன் பேருந்துகள் இயக்கத்திற்கு அரசு அனுமதி கொடுத்தது.

இதை தொடர்ந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் மதுரை, விருதுநகர் உட்பட மற்ற 24 மாவட்டங்களிலும் பேருந்து சேவைகள் துவங்கியது. இதற்கிடையில் ஜூலை 12 வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு தமிழகம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களிலும் 50% இருக்கைகள் அனுமதியுடன் பேருந்து சேவைகள் இன்று (ஜூலை 5) முதல் துவங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.

தவிர சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மொத்த 1,047 பேருந்துகளில் 65% பேருந்துகள் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 302 நகரப்பேருந்துகள் மற்றும் 406 புறநகர் பேருந்துகள், 50% பயணிகளுடன் தற்போது இயக்கப்படுகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் 35% பேருந்துகள் தற்போது இயக்கப்படவில்லை. தொடர்ந்து பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்றவாறு பேருந்துகள் இயக்கப்படும் என சேலம் மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: