இந்திய கிரிக்கெட் அணியில் 7வது நபராக பும்ரா விலகல்..

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் 7வது நபராக பந்து வீச்சு வீரர் பும்ராவும் விலகியுள்ளார். ஆஸி பயண இந்திய அணியில் இருந்து ஏற்கெனவே காயம் காரணமாக இசாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ள நிலையில், இப்போது பும்ராவும் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின்போது பும்ராவுக்கு அடிவயிற்றில் பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரால் பிரிஸ்பேனில் வரும் 15-ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட்டில் பந்துவீச இயலாத சூழலில் இருப்பதால், விலகுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.