தொழில்நுட்பம்

கம்மியான விலையில் பட்டையை கிளப்பும் பட்ஜெட் கார்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி விற்பனையில் எப்போதும் டாப்தான். பட்ஜெட் பிரிவு கார்கள் முதல் நடுத்தர கார்கள் வரை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்த நிறுவனம். தொடர்ந்து நாலாவது ஆண்டாக இந்தியாவின் முதல் ஐந்து Top selling cars பட்டியலில் அனைத்து கார்களும் மாருதி சுஸுகி நிறுவனத்தை சேர்ந்தவையாக இருக்கின்றன.

front left side 47

​முதலிடத்தில் ஸ்விப்ட்

2020-21ஆம் ஆண்டில் மிக அதிகமாக விற்பனையான கார் ஸ்விப்ட் (Swift). சுமார் 1.72 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்விப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன. அடுத்தபடியாக பலேனோ (Baleno) இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. சுமார் 1.63 லட்சம் பலேனோ கார்கள் விற்பனையாகியுள்ளன.

front left side 47

​டிமாண்ட் குறையாத கார்கள்

மூன்றாம் இடத்தை வேகன் ஆர் (WagonR) பிடித்துள்ளது. சுமார் 1.60 லட்சம் ஆல்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன. நான்காவது இடத்தை ஆல்டோ (Alto) பிடித்துள்ளது. சுமார் 1.59 ஆல்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன. ஐந்தாம் இடத்தை டிசயர் (Dzire) பிடித்துள்ளது. சுமார் 1.28 லட்சம் டிசயர் கார்கள் விற்பனையாகியுள்ளன.

marutisuzuki dzire right front three quarter8

கடந்த நிதியாண்டில் இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையான கார்களில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஐந்து கார்கள் இடம்பெற்றிருப்பதை பார்த்தோம். இதுமட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பயணிகள் வாகன (Passenger vehicle) விற்பனையில் மேற்கூறிய மாருதி சுஸுகி மாடல்கள் 30% பங்கு வகிக்கின்றன.

front left side 47

மாருதி சுஸுகி நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து விற்பனையில் முதலிடத்தை பெற்றுத்தந்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் சாஷங் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்திலும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க:  உங்கள் ஆதார் அட்டையை லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: