இந்தியா

BREAKING: இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 2.47 லட்சம் பேர் பாதிப்பு..!

மூன்றாவது அலைக்கு மத்தியில் நாட்டிலேயே முதன்முறையாக, 24 மணி நேரத்தில் 2.47 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,47,417 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றைய விட 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 84,825 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 11,17,531 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 380 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,85,035 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதன்படி இதுவரை மொத்தமாக உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் பாதிப்புக்கு 5,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  சபரிமலையில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
Back to top button
error: