இந்தியா

15 வயது சிறுமியை 30 பேருக்கு விருந்தாக்கிய காதலன் கைது..

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறாள். தாயை இழந்த இந்த சிறுமி அதே பகுதியில் வசித்து வரும் தனது சித்தியுடன் வசித்து வருகிறாள். இந்த நிலையில் அந்த சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து காதல் ஆசை வார்த்தைகளைகூறியும், திருமண ஆசை காட்டியும் அந்த சிறுமியிடம், வாலிபர் உல்லாசம் அனுபவித்தார்.

அப்போது அந்த சிறுமிக்கு தெரியாமல் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த வாலிபர் அடிக்கடி, சிறுமியை உல்லாசத்துக்கு அழைத்தார். அப்போது அந்த வாலிபர் தான் செல்போனில் எடுத்து வைத்திருந்த உல்லாச வீடியோவை சிறுமியிடம் காட்டி மிரட்டினார்.

தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் தன்னிடம் உள்ள ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் கதறி அழுத அந்த ஆதரவற்ற சிறுமி பின்னர் அந்த வாலிபரின் ஆசைக்கு ஒப்புக்கொண்டார். அதையடுத்து அந்த வாலிபர், சிறுமியிடம் பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் தனது காதலனான அந்த வாலிபருக்கும், தன்னுடைய சித்திக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதும், தனக்கு நேர்ந்த இந்த கொடுமைக்கு சித்தியும் உடந்தையாக இருப்பதும் சிறுமிக்கு தெரியவந்தது. பின்னர் கதறி அழுத சிறுமி இதுபற்றி தனது காதலனிடமும், தன்னுடைய சித்தியிடமும் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் 2 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பின்னர் அந்த வாலிபர், சிறுமியை தன்னுடைய நண்பர்கள், தனக்கு தெரிந்தவர்கள் என பலருக்கு விருந்தாக்கி உள்ளார். இதுவரை 30 பேர் அந்த சிறுமியிடம் உல்லாசமாக இருந்ததாகவும், அதற்கு அந்த வாலிபரும், அவளது சித்தியும் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு(2020) செப்டம்பர் மாதம் முதல் இந்த கொடுமை அரங்கேறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அக்கம்பக்கத்தினரிடம் கண்ணீர் மல்க கூறியிருக்கிறாள். அவர்கள் இதுபற்றி பெண்கள் நல அமைப்பினர் மூலம் சிருங்கேரி போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது அந்த சிறுமிக்கு நடந்த கொடுமையான சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் போலீசார் அந்த பெண்ணின் காதலன், சித்தி உள்பட 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் அந்த பெண்ணின் காதலன், சித்தி உள்பட 8 பேரை நேற்று கைது செய்தனர்.

மேலும் அந்த நாசப்படுத்திய 24 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். அவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா கூறினார். தற்போது பாதிக்கப்பட்ட அந்த சிறுமி பெண்கள் பாதுகாப்பு மையத்தில் போலீசார் மூலம் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Back to top button
error: Content is protected !!