தமிழ்நாடுமாவட்டம்

பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம்!!

தமிழகத்தில் வரும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை அனைத்து தரப்பு மக்களும் மிகவும் சிறப்பாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி அரசும் மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொண்டு வருகிறது. ரேஷன் கடைகளில் ஒவ்வொரு வருடமும் ரொக்க பரிசும், சேலை, மளிகை பொருட்கள் மற்றும் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் ரொக்க பரிசாக 3000 ரூபாய் வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இப்படியாக இருக்க, பொங்கல் பண்டிகை தொடர்ந்து மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனால் தங்களது சொந்த ஊர்களை விட்டு வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்கள் விடுமுறை தினங்களை தங்களது சொந்த ஊர்களில் கொண்டாட திட்டமிடுவர். அதற்கு பெரும்பாலான மக்கள் பேருந்துகளில் தான் செல்ல திட்டமிடுவர். மக்களின் நலன் கருதி அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு முதற்கட்டமாக, ஜனவரி மாதம் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கும் மக்கள் இன்று முதல் முன்பதிவினை மேற்கொள்ளலாம் என்று தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்கு செல்ல இருக்கும் மக்கள் முன்பதிவினை இன்று முதல் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. முன்பதிவினை தமிழக போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in என்ற தளத்தில் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் திருப்பதி மற்றும் பெங்களூரு போன்ற ஊர்களுக்கு செல்லவும் முன்பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது பற்றிய முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  பெரம்பலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!
Back to top button
error: