பொழுதுபோக்கு

குண்டு குண்டு குலோப்ஜாமூன் ரெசிபி!

வீட்டில் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று நினைப்போர் 10 நிமிடத்தில் செய்து சாப்பிடக்கூடிய ஒரு இனிப்பு வகைதான் குலோப்ஜாமூன். இந்த குலாப் ஜாமூனை இப்போது செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

குலோப்ஜாமூன் பவுடர் – 1 பாக்கெட்
சர்க்கரை – 150 கிராம்
நெய் – 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை

குலாப் ஜாமூன் பவுடரை ஒரு பாத்திரத்தில் போட்டி தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

அடுத்து இதனை 20 நிமிடங்கள் ஊறவிடவும்.

வாணலியில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 150 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி கம்பு பதத்தில் பாகு காய்ச்சவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கையில் நெய் தேய்த்துக் கொண்டு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

இதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து சர்க்கரைப் பாகினை ஆறவிட்டு 1 மணி நேரம் ஊறவைத்தால் குலோப்ஜாமூன் ரெடி…!!


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  வெஜ் பன்னீர் பிரைடு ரைஸ் செய்வது எப்படி?
Back to top button
error: