பொழுதுபோக்குதமிழ்நாடு

சைவப் பிரியர்களுக்கான பலாக்காய் பிரியாணி..!

சைவப் பிரியர்கள் அதிகம்பேர் விரும்பிச் சாப்பிடும் வகையிலான பிரியாணியை பலாக்காய் கொண்டு தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – 2 கப்
பலாக்காய் – 10
வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
பட்டை- 2,
கிராம்பு- 2,
ஏலக்காய்- 2,
பிரியாணி இலை – 1
தயிர் – 1 கப்
நெய் – 2 ஸ்பூன்
பிரியாணி மசாலா தூள் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
புதினா தழை – தேவையான அளவு

செய்முறை

பாசுமதி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியினை நறுக்கி ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம், பிரியாணி இலை சேர்த்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரியாணி மசாலா தூள், மிளகாய் தூள், புதினா தழை, பலாக்காய், தயிர், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
அடுத்து பாத்திரத்தில் அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து அரிசியை வேகவிட்டு இறக்கினால் பலாக்காய் பிரியாணி ரெடி..!!

இதையும் படிங்க:  சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: