தமிழ்நாடு

‘தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல’ கே.பி. முனுசாமியின் பேச்சு – ‘உட்கட்சி விவகாரம்’ என்கிறார் பாஜக குஷ்பு

அ.தி.மு.க.வின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பேசுகையில்,

’(தமிழக சட்டசபை தேர்தலில்) தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல. தேர்தலில் திமுக-அதிமுக இடையேதான் நேரடி போட்டி. ஜனநாயக அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் தான் போட்டி’ என கூறினார்.

கேபி முனுசாமியின் பேச்சு தேசிய கட்சியான பாஜக-வை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருந்தது. இதனால், அதிமுக-பாஜக இடையே உள்ள கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் புதுக்கோட்டையில் பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக-வை சேர்ந்த நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை குஷ்பு சந்தித்தார். அப்போது, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமியின் ‘தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல’ என்ற கருத்து தொடர்பாக குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பாஜக-வின் குஷ்பு, ’அதிமுகவும், பாஜகவும் ஒன்றையொன்று வழிநடத்தவில்லை. பொதுக்குழுவில் கே.பி. முனுசாமி பேசியது அதிமுக உட்கட்சி விவகாரம்’ என்றார்.

Back to top button
error: Content is protected !!