தமிழ்நாடு

27ம் தேதி விடுதலை.. சசிகலாவிற்கு பாஜ “அட்வைஸ்”..

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வரும் 27ம்தேதி விடுதலையாவது முடிவாகி விட்டது. அவரை வரவேற்க அன்றைய தினம் தமிழகத்தில் இருந்து வாகனங்கள் எதுவும் கர்நாடக எல்லைக்குள் வர தடை விதிக்கப்படும் என்றும் அவரை பெங்களூர் போலீசார் சென்னை எல்லையில் கொண்டு வந்து விட்டு விட்டு செல்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா ஒரு நாள் பெங்களூரில் தங்கி விட்டு அடுத்த நாள் தான் சென்னை திருப்புவார் என குடும்பத்தினர் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சசிகலாவின் விடுதலை தமிழக அரசியலில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டாலும் அதிமுகவில் கண்டிப்பாக சலசலப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. சசிகலா தரப்பில்இருக்கும் டிடிவி அம்மா முன்னேற்ற கழகம் என்கிற கட்சியை நடத்தி வந்தாலும் நான் அதிமுக தான் சசிகலா கூறி வருவதால் பெங்களூரில் இருந்து வரும் போதே அவர் அதிமுக கொடி இருக்கும் காரில் தான் பயணம் செய்வார் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறையில் உடல்நலம் குன்றியுள்ள சசிகலாவிடம் தமிழக அரசியல் தொடர்புடைய விஷயங்களில் தலையிட வேண்டாம் என்றும், தற்போது உடல்நிலையை சரி செய்யும் பணிகளை மட்டுமே பார்க்குமாறும் பாஜ தரப்பில் சசிகலாவிற்கு அட்வைஸ் செய்யப்பட்டிருப்பதாக பெங்களூரில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இந்த தேர்தலில் பாஜ-அதிமுக கூட்டணிக்கு எனது ஆதரவு என சசிகலா தரப்பில் இருந்து அறிக்கை மட்டும் வெளியிட வேண்டும் என பாஜ அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிகிறது.

அதே போல் இபிஎஸ் தரப்பில் இருந்து சமீபத்தில் சந்தித்த தூதர் ஒருவரும் தேர்தல் முடிந்த பிறகு எந்தவிஷயமானாலும் பேசிக்கொள்ளலாம் என கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் ஓபிஎஸ் மட்டும் சமீபகாலமாக சசிகலா விவகாரத்தில் எந்த கருத்தையும் கூறாமல் இருக்கிறார். அவர் என்ன செய்யப்போகிறார்? என்பது தெரியவில்லை என்கின்றனர் தேனி பிரமுகர்கள்..

Back to top button
error: Content is protected !!