தமிழ்நாடுபொழுதுபோக்கு

பிரியாணி சைடிஷ் மட்டன் கறி..!

வாய்க்கு ருசியாக சிக்கன் பிரியாணி இருந்தாலும், அத்துடன் சுவைக்காக மற்ற உணவுகளையும் சேர்த்து உண்பது இன்றைக்கு வழக்கமாகி விட்டது. அதற்கு இந்த பிரியாணி சைடிஷ் மட்டன் கறி உதவும்.

தேவையான பொருட்கள்

மட்டன் – 500 கிராம்

மல்லித்தழை – கால் கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

மசாலா அரைக்க:

பெரிய வெங்காயம் – 3 (தோல் உரித்து, பெரிய துண்டுகளாக நறுக்கியது)

தக்காளி – 2 (பெரிய துண்டுகளாக நறுக்கியது)

இஞ்சி – 2 இன்ச் அளவுக்கு (தோல் சீவியது)

பூண்டு – 7 பல் (தோல் உரித்தது)

கொத்தமல்லித்தழை – கால் கப்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

பட்டை – 3 சிறிய துண்டுகள்

கிராம்பு – 3

ஏலக்காய் – 3

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – 2 சிட்டிகை

தாளிக்க:

கிராம்பு – 2

பட்டை – 2 சிறு துண்டுகள்

பச்சை மிளகாய் – 2 (நீளமாகக் கீறியது)

செய்முறை

மட்டனை நன்றாகக் கழுவி வைக்கவும். எலும்பு உள்ள துண்டுகள் இந்தக் குழம்புக்கு ருசியாக இருக்கும். மசாலாவுக்குக் கொடுத்துள்ள பொருட்களுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதைச் சேர்த்து நன்றாக 2 – 3 நிமிடங்கள் வதக்கவும். இதில் மட்டன் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

மட்டன் மசாலா கலவையில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் (500 மில்லி) சேர்த்து, மல்லித்தழை தூவி மூடி, வெயிட் போட்டு சிறு தீயில் 30 நிமிடங்கள் வேகவிடவும்.

பிரஷர் அடங்கியதும் திறந்து பார்த்து, கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்து விரும்பிய அளவுக்கு வற்றியதும் இறக்கி, பிரியாணியுடன் சூடாகப் பரிமாறவும்.

Back to top button
error: Content is protected !!