சினிமாபொழுதுபோக்கு

கவர்ச்சி புயலாக மாறிய பிக்பாஸ் ரித்விகா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் ரித்விகா. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு பல விளம்பர படங்களில் நடித்தார். ஆனால் பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் மற்ற நடிகைகளை போலவே போட்டோஷூட் நடத்த ஆரம்பித்து விட்டார் ரித்விகா. தற்போது அவர் மொட்டை மாடியில் சேலையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ரித்விகா

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றியவர் தான் ரித்விகா. பிக் பாஸ் வீட்டில் இவர் நடந்துகொண்ட விதமும் இவரின் பொறுமையும் மக்களை வெகுவாக ஈர்த்தது என்றே சொல்லலாம்.

மேலும் அந்த வீட்டை விட்டு வெளியேறிக ரித்விகா பல விளம்பர படங்களில் நடித்திருந்தார். அந்த விளம்பரங்களும் நன்கு பிரபலமடைந்தது. ஆனால் அவருக்கு படவாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். தமிழில் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

அந்த படத்தில் சிறு வேடம் என்றாலும் அந்த நடிப்பிற்காக இதுவரையில் மக்கள் மனதில் நிற்கிறார் என்றே சொல்லலாம். அந்த படத்திற்கு இவருக்கு விருதும் கிடைத்தது. மேலும் அடுத்தடுத்து குணச்சித்திர கதாபாத்திரத்திலேயே நடித்திருந்தார். இவருக்கு மெட்ராஸ் படம் ஒரு திருப்புமுனையாகவே அமைந்தது.

மேலும் ஒரு நாள் கூத்து போன்ற கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வந்தார். கபாலி படத்தில் ரஜினி உடனே சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன் பிறகு தான் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு. அந்த வாய்ப்பில் மக்களுக்கு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.

மேலும் டைட்டிலையும் கைப்பற்றினார். அதன் பிறகு இவருக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் பல வதந்திகளை பரப்பினர். திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியதாகவும் செய்திகள் பரவின.

rithvika 3

ஆனால் அதற்கு ரித்விகா பதிலடியும் கொடுத்தார். இந்நிலையில் படவாய்ப்புகளுக்காக மொட்டை மாடியில் மஞ்சள் நிற சேலையில் போஸ் கொடுத்தவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

loading...
Back to top button
error: Content is protected !!