தமிழ்நாடு

பாஸ்டேக் இன்று முதல் கட்டாயம்.. ஜாக்கிரதையா இருங்க..

இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு சுங்கக்கட்டணம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சுங்கச்சாவடிகளின் அனைத்து வழிகளும், இன்று நள்ளிரவு முதல், பாஸ்டேக் வழிகளாக அறிவித்துள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், பாஸ்டேக்கின்றி செல்லும் வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை முதல் பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் அல்லது, செயல்பாட்டில் இல்லாத பாஸ்டேக் பொருத்தப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடிகளின் பாஸ்டேக் பாதைக்குள் நுழையும் போது, இருமடங்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். டிஜிட்டல் மூலமான கட்டணத்தை மேலும் ஊக்குவிக்கவும், எரிபொருள் வீணாவதை தவிர்க்கவும், சுங்கச் சாவடிகளில் தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்காகவும் இந்த பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!