ஆரோக்கியம்தமிழ்நாடு

இந்த மீன்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு ஆபத்தாம்! உஷாரா இருங்க..

பொதுவாக அசைவ உணவுகளில் மீன்கள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர் வர அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக உள்ளது.

கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பேட்டி ஆசிட்களான ஒமேகா 3 உள்ளது. இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகும்.

என்னத்தான் மீன்கள் உடல் நலத்திற்கு நல்லது என்றாலும் ஒரு சில மீன்களை அதிகமாக எடுத்து கொள்ளும்போது உடலுக்கு கேடு விளைவிற்பதாக உள்ளது.

தற்போது இந்த மீன்கள் என்னென்ன என்பதை பற்றி நாமும் தெரிந்து கொள்வோம்.

  • கானாங்கெளுத்தி மீனில் இருக்கும் உயர்ரக மெக்னீசியம் உடலுக்கு நல்லது தான் எனிலும், இதில் உள்ள அதிகளவு பாதரசம் உடலுக்கு தீய தாக்கத்தை விளைவிக்கக்கூடியது ஆகும்.
  • மஞ்சள் அல்லது வெள்ளி நிறத்தில் இருக்கும் விலாங்கு மீன் அதிகளவு சாப்பிடுவது உடலுக்கு அபாயகரமானது. இதிலிருக்கும் அதிகப்படியான பாலிகுளோரினேடட் பைபினைல் மற்றும் பாதரசம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மைக் கொண்டவை.

625.0.560.350.160.300.053.800.668.160.90

  • வாளை மீனிலும் அதிகளவு பாதரசம் இருக்கிறது. ஒரு வாளை மீனில் 976 ppm (Parts per million) பாதரசம் அளவு இருக்கிறது. அதிகளவு இது உடலில் சேரும் போது மூளையின் செல்களை இது சேதமடைய செய்கிறது.
  • நீல நிற துடுப்பு மற்றும் பெரிய கண்கள் உடைய இரண்டு வகையான சூரை தான் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன. வாளை மீனுக்கு அடுத்ததாக அதிகளவு பாதரசம் அளவு கொண்டுள்ள மீன் இதுவாகும்.

 

  • சில வகை சால்மன் மீன்களில் கரிம மாசு நிலைபெற்று இருப்பதால், நீரிழிவு மற்றும் உடல்பருமன் அதிகரிக்க காரணியாக இருக்கிறது. அதிகளவில் இதை உட்கொள்வது உடல்நலனுக்கு அபாயமாக மாறலாம்.
  • பால் சுறா போன்ற ஒருசில வகைகளை தவிர்த்து மற்ற அனைத்தும் விஷத்தன்மை கொண்டவை என்பதால் சுறாவை சாப்பிடக்கூடாது. மேலும் இதிலும் பாதரசம் அதிகளவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button
error: Content is protected !!