ஆரோக்கியம்

அல்சர்க்கு சிறந்த மருத்துவ குறிப்பு..!

வெள்ளை குங்கிலியம்(நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) 50 கிராம் எடுத்துக்கொண்டு அதை இளநீரில் போட்டு நான்கு கொதிக்க விட வேண்டும். இளநீர் நன்கு சுண்டிய பிறகு வடிகட்டி பொடிசெய்துகொள்ள வேண்டும். அந்த பொடியை தூய பசு வெண்ணெயில் இரண்டு கிராம் அளவு கலந்து காலை மாலை என இரு வேலையும் சாப்பிட வேண்டும். அதன் பிறகு ஒரு டம்ளர் பாலை குடித்து வர அல்சர் குணமாகும்.

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம். ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

மணத்தக்காளிக் கீரையோடு பாசிப் பயிறு, நெய் சேர்த்து சமைத்து தினமும் உண்டு வர அல்சர் குணமடையும்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

மேலும் அல்சர் குணமாக ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் பன்னீர் ரோஜா இதழ்களை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.அதன்பிறகு இரண்டு ஸ்பூன் தயிர் மற்றும் சிறிதளவு சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பானம் தயார். இந்த பானத்தை தினமும் மூன்று வேளை, மூன்று நாட்கள் தொடர்ந்து ஒரு கிளாஸ் அருந்திவர அல்சர் குணமாகும். அல்சர் நோய் உள்ளவர்களுக்கு உணவை சாப்பிட்ட பின்பு, சிலருக்கு வாந்தி வருவதுபோல் உணர்வுகள் ஏற்படும். அந்த சமயத்தில் இந்த பானத்தை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் உடனே சரியாகிவிடும். அதேபோல் நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு, சாப்பிட்ட உடன் சிலருக்கு புளித்த ஏப்பம் வரும். அவர்கள் இந்த பானத்தை ஒரு கிளாஸ் அருந்த உடனே பிரச்சனை சரியாகிவிடும்.

வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ண அல்சர் கட்டுப்படும்.

இளநீரில் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து இரவில் நிலவொளியில் விட்டு விடியற்காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்துவர அல்சர் குணமடையும்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம். மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

அகத்திக்கீரையை தினமும் உணவில் சிறிதளவு சேர்த்து சாப்பிட்டு வர அல்சர் குணமடையும்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம். சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு. அடிக்கடி சேர்த்துக்கொண்டால் அல்சர் குணமடையும்.

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி. கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி குடல் புண் என்று கூறப்படும் அல்சர் நோயில் இருந்து விடுபடலாம். அல்சர் முழுவதுமாக குணமடைய நாட்டு மருந்து மட்டுமே போதாது. அதோடு உணவு பழக்கங்களிலும் கட்டுப்பாடு நிச்சயம் தேவை.உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.அதோடு தினமும் குறைந்தது 3 லிட்டில் தண்ணீர் குடிக்க வேண்டும். அதோடு நேரத்திற்கு தூங்க வேண்டும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: