ஆன்மீகம்

பல்லி சொல்லும் பலன்கள்!!

வீட்டில் பல்லி ஒலி எழுப்புவதைத் தமக்கு ஏற்படப் போகும் நன்மை தீமைக்கான அறிகுறியாக மக்கள் நம்புகின்றனர்.

ஒரு சொல் சொன்னால் துன்பம்.

இரண்டு சொல் சொன்னால் தனலாபம்.

மூன்று சொல் சொன்னால் மரணம்.

நான்கு சொல் சொன்னால் சௌக்கியம்.

ஐந்து சொல் சொன்னால் உறவினர் வருகை.

ஆறு சொல் சொன்னால் பீடை.

ஏழு, எட்டு சொல் சொன்னால் அகமலிவு.

பல்லி எந்த திசையில் இருந்து சொல்கிறதோ அதற்கு ஏற்ப பலன்கள் உண்டு அப்படி, ஒவ்வொரு நாளிற்கும் பல்லி சொல்லும் பலன்களை பார்போம்.

ஞாயிறு :

பல்லி கிழக்கு திசையில் சத்தமிட்டால் எதிர்பாராத பயத்தை ஏற்படுத்தும். தென்கிழக்கு திசையில் சத்தமிட்டால் கலகம் வரும். தெற்கு திசையில் சத்தமிட்டால் நன்மைகள் அதிகம். தென்மேற்கு திசையில் சத்தமிட்டால் உறவினர் வருகை. மேற்கு திசையில் சத்தமிட்டால் சோதனைகள் ஏற்படும். வடமேற்கு திசையில் சத்தமிட்டால் வஸ்திர லாபம் உண்டாகும். வடக்கு திசையில் சத்தமிட்டால் திரவிய லாபம் ஏற்படும். வடகிழக்கு திசையில் சத்தமிட்டால் லாபம் உண்டாகும்.

திங்கள் :

கிழக்கு திசையில் சத்தமிட்டால் திரவிய லாபமும், தென்கிழக்கு திசையில் சத்தமிட்டால் கலகமும், தெற்கு திசையில் சத்தமிட்டால் சத்துரு வரவும் ஏற்படும். தென்மேற்கு திசையில் சத்தமிட்டால் விரோதம் உண்டாகும். மேற்கு திசையில் சத்தமிட்டால் இராஜ தரிசனம் காண செல்வீர்கள், வடமேற்கு திசையில் சத்தமிட்டால் துக்கமும், வடக்கு திசையில் சத்தமிட்டால் வஸ்திர லாபமும், வடகிழக்கு திசையில் சத்தமிட்டால் மங்களகரமான செய்தி வந்து சேரும்.

செவ்வாய் :

கிழக்கு திசையில் சத்தமிட்டால் செல்வமும், தென்கிழக்கு திசையில் சத்தமிட்டால் அதிக லாபமும், தெற்கு திசையில் சத்தமிட்டால் பதற்றம் உண்டாகும். தென்மேற்கு திசையில் சத்தமிட்டால் சத்துரு பயமும், மேற்கு திசையில் சத்தமிட்டால் அனுகூலமும், வடமேற்கு திசையில் சத்தமிட்டால் தீய விஷயமும், வடக்கு திசையில் சத்தமிட்டால் சத்துரு பயமும், வடகிழக்கு திசையில் சத்தமிட்டால் வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.

புதன் :

கிழக்கு திசையில் சத்தமிட்டால் சந்தோஷமும், தென்கிழக்கு திசையில் சத்தமிட்டால் அதிக லாபமும், தெற்கு திசையில் சத்தமிட்டால் சோம்பேறித்தனமும் ஏற்படும். தென்மேற்கு திசையில் சத்தமிட்டால் பந்து மரணமும், மேற்கு திசையில் சத்தமிட்டால் பயமும், வடமேற்கு திசையில் சத்தமிட்டால் திரவிய நாசமும், வடக்கு திசையில் சத்தமிட்டால் சுபகாரியங்களும், வடகிழக்கு திசையில் சத்தமிட்டால் தொழிலில் நஷ்டங்களும் ஏற்படும்.

வியாழன் :

கிழக்கு திசையில் சத்தமிட்டால் கெட்ட காரியங்களும், தென்கிழக்கு திசையில் சத்தமிட்டால் பந்து மரணமும், தெற்கு திசையில் சத்தமிட்டால் திரவிய லாபமும், தென்மேற்கு திசையில் சத்தமிட்டால் காரிய சித்தியும் ஏற்படும். மேற்கு திசையில் சத்தமிட்டால் கஷ்டமும், வடமேற்கு திசையில் சத்தமிட்டால் நல்ல செய்திகளும், வடக்கு திசையில் சத்தமிட்டால் தீமைகளும், வடகிழக்கு திசையில் சத்தமிட்டால் போஜன சுகமும் ஏற்படும்.

வெள்ளி :

கிழக்கு திசையில் சத்தமிட்டால் சுபகாரியங்களும், தென்கிழக்கு திசையில் சத்தமிட்டால் அலங்காரம், தெற்கு திசையில் சத்தமிட்டால் பந்து தரிசனமும், தென்மேற்கு திசையில் சத்தமிட்டால் நல்ல செய்திகளும் ஏற்படும். மேற்கு திசையில் சத்தமிட்டால் சந்தோஷமும், வடமேற்கு திசையில் சத்தமிட்டால் வீட்டில் கலகமும், வடக்கு திசையில் சத்தமிட்டால் கலகமும், வடகிழக்கு திசையில் சத்தமிட்டால் சத்ரு பயமும் ஏற்படும்.

சனி :

கிழக்கு திசையில் சத்தமிட்டால் கெட்ட விஷயமும், தென்கிழக்கு திசையில் சத்தமிட்டால் திரவிய லாபமும், தெற்கு திசையில் சத்தமிட்டால் இராஜ தரிசனமும், தென்மேற்கு திசையில் சத்தமிட்டால் ரோகமும் ஏற்படும். மேற்கு திசையில் சத்தமிட்டால் வஸ்திரமும், வடமேற்கு திசையில் சத்தமிட்டால் ஸ்திரீ போகமும், வடக்கு திசையில் சத்தமிட்டால் பிடித்தமான விஷயமும் ஏற்படும். வடகிழக்கு திசையில் சத்தமிட்டால் நஷ்டம் ஏற்படும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: