ஆரோக்கியம்

உலர்திராட்சை உண்பதால் கிடைக்கும் பயன்கள்!

நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று திராட்சை. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. அதில் உலர்திராட்சை பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.

உலர் திராட்சையின் நன்மைகள்

உலர் திராட்சையில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம். குறிப்பாக இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

சாப்பிட வேண்டிய அளவு

100 கிராம் உலர்திராட்சையில் 299 கலோரிகள் உள்ளன. நாம் ஒரு வேளை சாப்பிடும் உணவின் அளவில் இருக்கும் கலோரிகளை, 100 கிராம் உலர் திராட்சையைச் சாப்பிட்டாலே பெற முடியும்.100 கிராம் உலர் திராட்சையில் 23 சதவிகிதம் இரும்புச்சத்து உள்ளது. செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.

உலர் திராட்சையின் மருத்துவ பயன்கள்

1. இரத்த சோகையை கட்டுப்படுத்தும்.

2. மஞ்சள் காமாலை நோய் குணமடையும்.

3. மலச்சிக்கல் சரியாகும்.

4. கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

5. குழந்தை ஆரோக்கியமாகவும், திடமாகவும் வளரும்.

6. தொண்டை கரகரப்பு குணமடையும்.

7. மூலநோய் குணமடையும்.

8. உடல் எடை அதிகரிக்கும்.

இதையும் படிங்க:  யார் யாருக்கு எந்த பழம் சிறந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: