ஆரோக்கியம்

வெங்காய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்?

வெங்காயத்தின் தாயகம் ஆசியாவாக கருதப்பட்டாலும், இன்று உலகம் முழுவதும் வெங்காயம் பயிரிடப்படுகிறது. இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே வெங்காயத்தை நம் முன்னோர்கள் உபயோகித்திருப்பது வரலாற்று ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. நம்மைப் போன்றே, எகிப்தியர்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெங்காயத்தை பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

பிரமிடுகளைக் கட்டிய தொழிலாளர்களுக்கு, வெங்காயத்தை உணவாக கொடுத்திருப்பதுடன், உயிரிழந்த மன்னர்களின் உடல்களைப் பதப்படுத்தி, மம்மியாக்குவதற்கும் வெங்காயத்தை பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வெங்காயத்தின் வகைகள், அவைகளின் சாகுபடி காலங்கள், வெங்காய டீ எப்படி தயாரிப்பது, அதன் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

வெங்காயத்தின் வகைகள்

வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என இரண்டு வகைகள் உள்ளன.

சின்ன வெங்காயத்தில் கோ 1, 2, 3, 4, 5 மற்றும் எம்டி 1 போன்ற வகைகள் உள்ளன.

பெரிய வெங்காயத்தில் எண் – 53, அக்ரிபவுன்ட், வெளிர் சிகப்பு வகைகளில் பூசா சிகப்பு, எண்-2-4-1, அக்ரிபவுன்ட் ஆகிய வகைகள் உள்ளன.

கோடைகாலம், குளிர்காலம் என இரண்டு காலங்களிலும் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், குளிர் கால வெங்காய சாகுபடியில் தான் அதிக மகசூல் கிடைக்கிறது.

வெங்காய தேநீர் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் – 1

பூண்டு பல் – 3

தேன் – 1 டீஸ்பூன்

தண்ணீர் – 2 கப்

பிரியாணி இலை – சிறிதளவு

எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை :

ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்கவைக்க வேண்டும். பிறகு வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி அதோடு பிரியாணி இலை சேர்த்து கொதிக்கும் தண்ணீரில் போடவும்.

வெங்காயம், பூண்டு நன்றாக வெந்ததும் தண்ணீர் நிறம் மாறத்தொடங்கும். அதன் பிறகு பாத்திரத்தை இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.

இதில் தேன், லவங்கப்பட்டை தூள், எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் பருகலாம்.

நன்மைகள்

வெங்காய தேநீர் பருகினால் இதய நோய் வராமல் தற்காத்து கொள்ளலாம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

வெங்காயத்தில் இருக்கும் குர்செடின் மற்றும் பிளாவனோல் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும், கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும் உதவுகிறது.

வெங்காயத்தில் தயாரிக்கப்பட்ட தேநீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் ஒரு கப் வெங்காய தேநீர் குடிப்பது நல்லது.

வயிற்றுக் கோளாறுகளை நீக்கி, செரிமானத்திற்கும் உதவுகிறது.

இதையும் படிங்க:  குடிநீரை மாற்றினால் சளி, காய்ச்சல் ஏன் வருகிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: