ஆரோக்கியம்

க்ரீன் டீயுடன் துளசி சேர்த்து குடிப்பதனால் கிடைக்கும் பயன்கள்!!

க்ரீன் டீ அதிக அளவிலான ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் நிறைந்த ஆரோக்கியமான பானம் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்தது தான்.

அதேபோல மருத்துவ குணங்கள் நிரம்பிய மூலிகைகளில் ஒன்று தான் துளசியும். இந்த துளசியை க்டீயுடன் சேர்த்து குடித்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகின்றது.

அந்தவகையில் க்ரீன் டீயுடன் துளசி சேர்த்து குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

துளசியுடன் க்ரீன் டீ சேர்த்து குடிப்பதனால் ஆஸ்துமா, நீண்ட நாள் மார்புச்சளி, ஆகிய பிரச்சினைகள் குறையும். அதோடு சுவாசப் பாதையில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் தொற்றுக்களையும் அழிக்கும் வல்லமை கொண்டது.

துளசியில் மிக அதிக அளவில் மக்னீசியம் நிறைந்திருக்கிறது. க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்சிடண்ட் நிறைந்திருக்கிறது. இவை இரண்டையும் சேர்க்கும்போது உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது. ரத்த நாளங்கள் புத்துணர்ச்சி அடைகின்றன.

க்ரீன் டீயில் தினமும் பிரஷ்ஷான துளசி இலைகளையோ அல்லது நிழலில் உலர்த்திப் பொடி செய்ததையோ உங்களுடைய க்ரீன் டீயுடன் சேர்த்து குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை பிரச்சினைகள் கூட சரியாகும்.

க்ரீன் டீயுடன் துளசி சேர்த்து குடிக்கும்போது, கார்டிசோல் ஹார்மோன் சுரப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளும் குறைகிறது.

க்ரீன் டீயில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் குணம் அதிகம். அதனுடன் துளசியை சேர்த்து சாப்பிடும்போது அவற்றில் உள்ள ஆன்டி-ஆக்சிடண்டுகள் இணைந்து ஆண்டி-கார்ஜோஜெனிக் தன்மையை உடலில் அதிகரிக்கச் செய்து புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, அவற்றை அழிக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  வாழைப்பூ சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமா?
Back to top button
error: