ஆன்மீகம்

காயத்ரி மந்திரம் சொல்வதால் கிடைக்கும் பலன்கள்!

காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடமாகும். காயத்ரி என்ற ஒலியின் அளவைக் கொண்டு இயற்றப்பட்டதால் இதற்கு இந்த பெயர் ஏற்பட்டது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் காயத்ரி மந்திரம் உண்டு. காயத்ரி மந்திரம் இல்லாமல் செய்யப்படும் எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது என்று சாஸ்திரம் கூறுகிறது. அதையடுத்து காயத்ரி மந்திரத்தின் சிறப்பு மற்றும் அதன் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

காயத்ரி மந்திரம்:

ஓம் பூர் புவஸ்வ

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ: யோந: ப்ரசோதயாத்

விளக்கம்

யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ, அந்த சுடர்க் கடவுளின் மேலான தீப ஒளியைத் தியானிப்போமாக என்பதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தமாகும்.

எந்த நேரம் சொல்வது

இறைவனுடைய நாமத்தை எல்லோரும் ஒன்று கூடியிருந்து உரக்க உச்சரிப்பது போன்று, காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம்.

உபநயனம் செய்தவர்கள் மூன்று சந்தியாகாலங்களிலும் காயத்ரி மந்திரத்தை கூற வேண்டும்.

சந்தியாகாலம் என்பது இரவும் பகலும் சந்திக்கும் காலம். அதேபோல் பகலும் இரவும் சந்திக்கும் காலம். காயத்ரி மந்திரம் காலையில் காயத்ரி தேவிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரி தேவிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதி தேவிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

கண்டுபிடித்தவர்

சத்ரிய வம்சத்தை சேர்ந்த மகரிஷி விசுவாமித்திரரால் அருளப்பட்ட இந்த காயத்ரி மந்திரத்திரத்தை விடச் சிறந்த மந்திரம் உலகில் வேறு எதுவும் கிடையாது.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் காயத்ரி மந்திரம் உண்டு.

காயத்ரி மந்திரம் இல்லாமல் செய்யப்படும் எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது என்று சாஸ்திரம் சொல்கிறது.

காயத்ரி மந்திரம் வேத நூல்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கடவுளையும் தியானிக்க தனித்தனி காயத்ரி மந்திரங்கள் உள்ளது.

எத்தனை முறை

தினந்தோறும் குறைந்த பட்சம் 11 முறை சொல்வது நல்லது.

குறிப்பிட்ட காரியத்தை வேண்டி வழிபடும்போது 108 முறை கூறுவது சிறப்பு.

கும்பாபிஷேகம், கலஷாபிஷேகம் போன்ற கோயில் காரியங்களின்போது, 1008 முறை அல்லது 1,00, 008 முறை கூறுவது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் நன்மையை தரும்.

பலன்கள்

காயத்ரி மந்திரம் சொல்வதால் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்குகிறது.

நினைவுத்திறன் மற்றும் கற்றல் திறன் அதிகரிக்கும். கவனச் சிதறல் உள்ளிட்ட பிரச்சனைகளை நீக்குகிறது.

காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வரும் போது உடலில் உள்ள சக்கரங்கள் செயல்பட ஆரம்பிக்கின்றன.

காயத்ரி மந்திரம் சொல்லும்போது உடலின் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறது.

ஆக்சிஜன் இரத்த நாளங்கள் வழியாக உடலில் பாய்ந்து, உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேறுகின்றன.

இதையும் படிங்க:  புரட்டாசி 2- வது சனிக்கிழமையின் மகிமைகள்!

சுவாசிக்கும் திறனை மேம்படுத்துகிறது.

காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும்போது நுரையீரல் நன்கு செயல்படுகிறது.

இதய பிரச்சனைகளை நீக்கி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

காயத்ரி மந்திரத்தை கூறுவதால், தியானம் செய்வதால் கிடைக்கும் பயன்கள் கிடைக்கிறது.

மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் தூண்டப்படுவதால்,.மூளை நரம்பு புத்துணர்வு பெறுகிறது. உடலில் நேர்மறை சக்தி அதிகரிக்கிறது.

காயத்ரி மந்திரம் சொல்லும் போது நம்முடைய நாக்கு, தொண்டை, வாய், உதடு, முக தசைகள் உருவாக்கும் அதிர்வுகள் உடலுக்குப் புத்துணர்வு அளிக்கிறது.

மனதை அமைதிப்படுத்தும், மன அழுத்தம், பதற்றத்தைப் போக்கும்.

மனம் ஒருநிலையைப்படும்போது மனதில் உள்ள அழுத்தம் நீங்கி பதற்ற நிலை மறைகிறது.

செரட்டோனின் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால், மகிழ்ச்சியான மனநிலையை அளிக்கிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: