ஆரோக்கியம்தமிழ்நாடு

சிறுநீரக தொற்று ஏற்பட இதுவும் ஒரு காரணமாக இருக்குமாம்! கவனமா இருங்க..!

உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். உடலில் சேரும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முக்கியப் பணியை மேற்கொள்ளுகின்றது.

உடல் உறுப்புகளை சரிவர இயங்கச்செய்வது, சிறுநீரை சரியாக வெளியேற்றுவது, செரிமானத்தை சரி செய்வதை போன்ற பணிகளையும் மேற்கொள்கிறது.

அப்படிப்பட்ட சிறுநீரகத்தில் தொற்றுகள் ஏற்படும்போது, அதன் பணிகளை சரிவர செய்ய முடியாது. இதனால் பாதிக்கப்படுவது சிறுநீரகம் மட்டுமல்ல அதை சார்ந்து இயங்கும் மற்ற உறுப்புகளும் தான்.

எனவே இவற்ழற ஆரம்பத்திலே கண்டறிந்து சரி செய்வது நல்லது. அதற்கு முதலில் ஏன் சிறுநீரக தொற்று ஏற்படுகின்றது என்ற காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் இரண்டுமே சிறுநீரக்தொற்றை உண்டாக்கும். காரணம் சிறுநீர்ப்பாதையும், ஆசன வாயும் அருகருகே இருப்பதால் எளிதில் கிருமிகள் தாக்கிவிடும்.

சர்க்கரை வியாதி இருந்தாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது சிறுநீரிலும் வெளியேற்றப்படும். சிறுநீர், சிறு நீர்ப்பையில் அதிக நேரம் தங்கும்போது, சர்க்கரையால் அதிக அளவு கிருமிகள் உருவாகி தொற்றை ஏற்படுத்திவிடும்.

சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைத்தால் அவை கிருமிகளை உருவாக்கிவிடும். ஆகவே அவ்வப்போது சிறுநீரை கழித்துவிடுதல் அவசியம்.

சுத்தமான உள்ளாடை அணியாமலிருப்பது, சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால், அந்தரங்க பகுதிகளை சுத்தமாக வைக்காமலிருப்பது, போதிய அளவு நீர் குடிக்காமலிருப்பது ஆகியவைகளும் சிறுநீர் தொற்றை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க:  நாளை தடுப்பூசி போடுவது சந்தேகமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: