வேலைவாய்ப்பு

அடிதூள்! இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு – தேர்வு, நேர்காணல் கிடையாது!!

இந்திய அஞ்சல் துறையில் இருந்து நிரப்படமால் உள்ள காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஞ்சல் துறையின்கீழ் செயல்படும் Mail Motor Service ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் Staff Car/ MMS Driver பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் – இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர் – Staff Car Drivers
பணியிடங்கள் – 09
விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

Staff Car/ MMS Driver பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சமாக 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரிகள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு முன்னர் Dispatch Rider தகுதியில் பணிபுரிந்தவராகவும், பணியில் நல்ல அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் Motor mechanism பணிகளில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.24,500/- (Level 2 7th CPC Matrix) வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது .

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் வரும் 10.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_17082021_OD_E.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: