வேலைவாய்ப்பு

அடிதூள்.! ரூ.31,000/- சம்பளம் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Computer Science, Electronics & Communication, Mechanical பணிகளுக்கு தலா 1 பணியிடங்கள் என மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்படவுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 28 ஆக இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் B.E/B.Tech அல்லது M.E/M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கல்வி தகுதி குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 31,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் செண்டு விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் admintbrl@tbrl.drdo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 17.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official PDF Notification – https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/JRF__Advt_TBRL_17.12.2021.pdf

Official Site – https://www.drdo.gov.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: