இந்தியா

குழந்தை விளையாடும்போது இறந்ததாக நாடகம்.. பலாத்காரம் செய்தபோது பலியானதாக பகீர் தகவல்..!

கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தை கயிற்றில் கழுத்து இறுக்கி இறந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி வண்டிப்பெரியாறு பகுதியைச் சேர்ந்த 5 வயது பெண் குழந்தை, கடந்த ஆண்டு மார்ச் மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது வாழைத்தார் கட்டும் கயிற்றில் கழுத்து இறுக்கி இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குழந்தையின் பிரேத பரிசோதனையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. குழந்தையின் குடும்ப நண்பராக இருந்த அர்ஜூனன் என்பவர் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் பலாத்காரம் செய்தபோது அந்த குழந்தை இறந்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ஜூனன் குழந்தையை கயிற்றில் மாட்டி தொங்கவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அர்ஜூனன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குழந்தை பலாத்காரம் செய்தபோது இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: