இந்தியா

செப்டம்பர் மாதத்தில் இன்னும் 8 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது – RBI விடுமுறை பட்டியல்!!

செப்டம்பர் மாதத்தில் மீதம் இருக்கும் 20 நாட்களில் சுமார் 8 நாட்கள் வரை வங்கிகள் செயல்படாது என இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை பட்டியல் தெரிவித்துள்ளது. அதனால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை விரைந்து நிறைவேற்றிக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை நாட்காட்டியின் படி செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 12 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்றைய (செப்டம்பர் 11) நிலவரப்படி, இனி வரவுள்ள நாட்களில் மொத்தம் 8 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது செப்டம்பர் மாதத்தில் நடந்து முடிந்துள்ள 10 நாட்களில் வார இறுதி நாள், பண்டிகை நாள் என ஏற்கனவே 4 நாட்களுக்கு வங்கிகள் செயல்படவில்லை.

இதை தொடர்ந்து அடுத்து வரவுள்ள மீதி 20 நாட்களில் 8 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 8 நாட்களும் பொது விடுமுறை நாட்கள் அல்ல. இதில் மாநிலங்களுக்கான சிறப்பு விடுமுறை, பண்டிகை நாட்கள், வார இறுதி நாட்கள் அனைத்தும் அடங்கும். இருப்பினும் வாடிக்கையாளர்கள் வங்கிகள் செயல்படும் மீதமுள்ள நாட்களை கவனத்தில் கொண்டு தங்களது சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரிசர்வ் வங்கி உத்தரவின் படி செப்டம்பர் மாதத்திற்கான மீதமுள்ள விடுமுறை நாட்காட்டியின் படி,

  • செப்டம்பர் 11 ஆம் தேதி – இரண்டாவது சனிக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி பூஜையின் 2 வது நாளை முன்னிட்டு வங்கிகள் செயல்படாது.
  • செப்டம்பர் 12 ஆம் தேதி – ஞாயிறு, பொது விடுமுறை.
  • செப்டம்பர் 17 ஆம் தேதி – கர்ம பூஜையை முன்னிட்டு ராஞ்சியில் வங்கிகள் செயல்படாது.
  • செப்டம்பர் 19 ஆம் தேதி – ஞாயிறு, பொது விடுமுறை.
  • செப்டம்பர் 20 ஆம் தேதி – இந்திரஜத்ரா பண்டிகையை முன்னிட்டு கேங்டாக் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
  • செப்டம்பர் 21 ஆம் தேதி – ஸ்ரீ நாராயண குரு சமாதி நாளை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் அடைக்கப்படும்.
  • செப்டம்பர் 25 ஆம் தேதி – நான்காவது சனிக்கிழமை, விடுமுறை நாள்.
  • செப்டம்பர் 26 ஆம் தேதி – ஞாயிறு, பொது விடுமுறை.

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ஜம்மு-காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவும் டிரோன்கள்.. சுட்டு வீழ்த்த பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவு!
Back to top button
error: