இந்தியா

மேற்கு வங்க மாநிலத்தில் செப்.2 முதல் வங்கிகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு – மாநில முதல்வர் அறிவிப்பு!!

மேற்கு வங்க மாநிலத்தில் முன்னதாக வங்கிகள் செயல்படும் நேரம் குறைவாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் மாலை 5 மணி வரை வங்கிகள் செயல்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலையின் காரணமாக மாநில வாரியாக தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து தொழில்துறைகளும் முடங்கியது. அனைத்து மாநிலங்களிலும் அரசின் அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கியது. மற்ற துறைகள் அனைத்தும் செயல்படவில்லை. மேலும், வங்கிகளில் மிகவும் அத்தியாவசியமான 4 சேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் நேரடியாக வர வேண்டும். மற்ற சேவைகள் அனைத்தையும் ஆன்லைன் முறையில் நிறைவேற்றிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

நாட்டின் வங்கிகள் நிர்வாக சங்கத்தினர் அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் 2 மதியம் மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று அறிவித்தது. மேலும், வங்கிகளில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளும் வெளியிடப்பட்டு, மக்கள் அதனை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மாதத்தில் வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி அளித்திருந்தார் முதல்வர் மம்தா பானர்ஜி. இந்நிலையில், இன்று மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு வழங்கிய ஆலோசனையின் படி, நாளை ( செப்டம்பர் 2) முதல் மேற்கு வங்கத்தில் வங்கிகள் மாலை 5 மணி வரை செயல்படலாம் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், வார நாட்களில் மேற்குறிப்பிட்ட நேரத்திலும், மற்றபடி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: