தமிழ்நாடு

தமிழகத்தில் 7 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!!

தமிழகத்தில் நடப்பு ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி தொடர்பான வேலைகள் இருந்தால் விரைந்து முடித்துக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதனால் முதல்வர் நோய் பரவலை தடுக்க முழு ஊரடங்கை பிறப்பித்தார். அனைத்து கடைகள் வணிக வளாகங்கள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அரசு தடை விதித்தது. மக்கள் தங்கள் வேலைகளை இழந்து மிகவும் சிரமப்பட்டனர். இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி, மருந்து கடைகள் போன்றவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் வரிசையில் வங்கிகளும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகி விட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து துறை பணிகளும் தடை செய்யப்பட்டது. ஆனால் வங்கி துறை தொடர்ந்து இயங்கியது. மக்களுக்கு பணம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. அதனால் வங்கிகள் ஊரடங்கு காலத்தில் பகுதி நேரமாக 50% பணியாளர்களுடன் இயக்கப்பட்டது.

வாடிக்கையாளர்கள் வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளை தொடர்ந்து மேற்கொண்டனர். தற்போது ஜூலை மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

நடப்பு மாதத்தில் வங்கிகளின் விடுமுறை நாட்கள் :

  • 04.07.2021 ஞாயிற்றுக்கிழமை
  • 10.07.2021 இரண்டாவது சனிக்கிழமை
  • 11.07.2021 ஞாயிற்றுக்கிழமை
  • 18.07.2021 ஞாயிற்றுக்கிழமை
  • 21.07.2021 பக்ரீத் விடுமுறை
  • 24.07.2021 நான்காவது சனிக்கிழமை
  • 25.07.2021 ஞாயிற்றுக்கிழமை

இவ்வாறாக மொத்தம் இந்த ஜூலை மாதத்தில் ஏழு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான வேலைகள் இருந்தால் விரைந்து முடித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: