இந்தியா

பங்களாதேஷ் மாநிலத்தில் ஜூலை 14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – டெல்டா வைரஸ் பரவல் எதிரொலி!!

கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் வகையின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் தற்போது நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூலை 14 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்றின் பாதிப்பால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 153 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது டெல்டா வகை வைரஸின் பாதிப்பு துவங்கியதிலிருந்து உருவான தினசரி இறப்பில் இவை அதிகபட்சமாக கருதப்படுகிறது. அந்த வகையில் நோய் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9,44,917 ஆகவும், இறப்பு 15,065 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக டெல்டா மாறுபாடு வகை வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்டது இந்தியா – பங்களாதேஷின் எல்லை பகுதிகளில் தான். அதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பங்களாதேஷ், இந்தியாவுடனான தனது எல்லையை மூடியது. ஆனால் வர்த்தகத்திற்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 14 வரையுள்ள முழு ஊரடங்கில் அனைத்து வகையான அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தவிர அனைத்து அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. கடந்த வார இறுதியில், 2.5 மில்லியன் டோஸ் அமெரிக்காவின் மாடர்னா இன்க் தடுப்பூசியையும், 2 மில்லியன் டோஸ் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியையும் பங்களாதேஷ் பெற்றுள்ளது. 170 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பங்களாதேஷில் 3% பேர் மட்டுமே இதுவரை தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: