தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் வாழைப்பழம் – அரசுக்கு வலியுறுத்தல்!!

தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. சர்தார் பட்டேல் விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது முதன் முதல் அப்போதைய முதல்வராக இருந்த காமராஜர் அவர்கள் பள்ளிகளில் மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து. பள்ளிகளில் பசியின்றி கற்றலை மாணவர்கள் தொடர்ந்தனர். இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. சத்துள்ள காய்கறிகளுடன் தினமும் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் திருச்சியை அடுத்த தாயனூரில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. வாழை மேம்பாடு,உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் அறுவடை பின் சார் தொழில்நுட்பங்கள் போன்ற பணிகளை இந்த ஆராய்ச்சி நிறுவனம் சிறப்பாக செய்து வருகிறது. தற்போது 104 நிறுவனங்களுடன் நடைபெற்ற போட்டியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. சர்தார் பட்டேல் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த அந்த நிறுவனத்தின் இயக்குனர் உமா சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் வாழைப்பழங்கள் உள்ளது. இது குறித்த ஆராய்ச்சியில் எங்கள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என கூறினார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் உணவில் கண்டிப்பாக வாழைப்பழம் வழங்க வேண்டும் என அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் எனவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: