தமிழ்நாடு

ஆகஸ்ட் 22ம் தேதி கடைகளை திறக்க தடை – மாவட்ட நிர்வாகம்!!

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாளை மாவட்டம் முழுவதும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு 2000 என்ற அளவில் இருந்து தற்போது 1700 என்கின்ற அளவிற்கு குறைந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பு மிகவும் குறைந்துள்ள நிலையில், சில மாவட்டங்களில் தொற்று பரவல் சற்று அதிகமாக உள்ளது. இதனால் மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை பொறுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பாதிப்பு நிலவரத்தை பொறுத்து தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அத்தியாவசிய கடைகளுடன், மற்ற கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் 50% நபர்களுடன் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் 24 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த பகுதிகளில் ஞாயிற்று கிழமையில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்:

ஈரோடு மாநகரில் ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ்.தெரு, காந்திஜி சாலை, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் திரையரங்கு சாலை, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.சாலை, மேட்டூர் சாலை, ஸ்டோனி பாலம், வ.உ.சி.பூங்கா, காவிரி சாலை, பவானி வட்டத்தில் காவிரி சாலை, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடி துறை ஆகிய பகுதிகளிலும், கோபி நகரில் மார்க்கெட், கடைவீதி பகுதிகளிலும், சத்தியமங்கலம் வட்டத்தில் வரதம்பாளையம், நிா்மலா திரையரங்கு சந்திப்பு, புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பேருந்து நிலையம் எதிரில், தாளவாடி பேருந்து நிலையம், டி.என்.பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில், டி.ஜி.புதூர் போன்ற இடங்களில் நாளை அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் விதியை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  கோடநாடு வழக்கு.. விசாரணை செப்., 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
Back to top button
error: