இந்தியா

கேரளா மாநிலத்தில் பொது இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட தடை – மாநில அரசு உத்தரவு!!!

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாட மற்றும் மக்கள் பெருமளவில் கூட தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்தாலும் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. டெல்டா வைரஸ் பாதிப்பு இருப்பதால் கட்டுப்பாடு இல்லாமல் கொரோனா வைரஸ் பரவுகிறது. நாட்டில் மொத்த பாதிப்பில் 50 சதவிகிதம் பாதிப்பு கேரள மாநிலத்தில் தான் உள்ளது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்குவதால் சில கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.

ஓணம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் மக்கள் பொது இடங்களில் அதிகளவில் கூட வாய்ப்புள்ளது. எனவே கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஓணம் பண்டிகை காரணமாக கோவில்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஹஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரைக்கும் பத்து நாட்கள் திருவிழா கோலம்தான். ஓணம் என்றாலே வீடு முழுக்க அலங்காரமும், அழகாய் ஆடை அணிந்து வலம் வரும் இளசுகளும் குழந்தைகளும் தான் நினைவுக்கு வருவார்கள். அதை விட முக்கியமாக ‘ஓணம் சத்ய’ எனப்படும் திருவோண திருநாள் விருந்துதான்.

அன்று வகை வகையாக சமைத்து தலைவாழை இலை போட்டு ருசியாக சாப்பிடுவதோடு உறவினர்களுக்கும் விருந்து வைப்பார்கள். கிச்சடி, பச்சடி, அவியல், இஞ்சிப்புளி, கூட்டு, எரிசேரி, அடைபிரதமன், பருப்பு பிரதமன், என பல வகை சாப்பாடுகள் செய்து சாப்பிடுவார்கள். வீட்டு வாசல்களில் பூக்கோலம் போட்டு விளக்கேற்றி தங்களைக் காண வரும் மகாபலி சக்ரவர்த்தியை வரவேற்பார்கள். நடனங்கள் ஆடியும் ஊஞ்சல் விளையாட்டுகள் ஆடியும் ஒணம் பண்டிகையை கேரளாவில் கொண்டாடுவார்கள். கடந்த சில ஆண்டுகாலமாகவே கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதில் பல தடைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாடவோ, மக்கள் கூட்டமாக கூடவோ தடை விதிக்கப்படுகிறது. புதிய பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் பரிசோதனை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணி மாத பூஜை, திருஓணம் திருவிழாவை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெரிசலை தவிர்க்க, நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:  பாதுகாப்பு பெட்டகத்திற்கு புதிய விதிமுறைகள் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: